×

பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

நெல்லை, ஜன. 1: பாளை. அருகே உள்ள மேலக்குளம் கீழுரை சேர்ந்தவர் குழந்தைவேலு மகன் நித்திராஜ் (38). கூலி தொழிலாளியான இவர், சம்பவத்தன்று மேலக்குளத்தில் இருந்து கீழுர் நோக்கி பைக்கில் வந்தார். இசக்கி அம்மன் கோயில் அருகே எதிரே வந்த லாரி, நித்திராஜ் வந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில் நித்திராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பாளை. தாலுகா போலீசார், லாரி டிரைவர் மார்த்தாண்டம் புதியவிளையை சேர்ந்த டேவிட் (70) மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Larry ,
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...